Friday, November 8, 2024

மெட்டா ஏஐ பயன்பாட்டை நிராகரித்த ஆப்பிள்.. ஏன்?

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

மெட்டா ஏஐ பயன்பாட்டை நிராகரித்த ஆப்பிள்.. ஏன்?மெட்டா ஏஐ பயன்பாட்டை நிராகரித்த ஆப்பிள்: தனியுரிமை கொள்கைகளில் மோதல்ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்

ஆப்பிள் இயங்குதளத்தில் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடான லாமா ஏஐ பயன்படுத்தும் முன்மொழிவை ஆப்பிள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் மெட்டா இடையே மார்ச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முதல்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே முறிந்ததாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்த அறிந்த நபர்கள் ப்ளூம்பெர்க்குக்கு அளித்த தகவலில், ஆப்பிளின் இந்த முடிவு மெட்டாவின் தனியுரிமை சார்ந்த கொள்கைகள் போதாமை நிறைந்ததாக ஆப்பிள் கருதியுள்ளது எனத் தெரிவிக்கிறார்கள்.

ஆப்பிள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பினை முதன்மையாக கருதும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று.

அதே நேரத்தில்தான் ஆப்பிள் மற்ற ஏஐ நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆப்பிளின் ஜூன் கருத்தரங்கில் சாட்ஜிபிடி உடனான தனது இணைவு குறித்து அறிவித்தது.

நடப்பாண்டில் இருந்து ஐபோன் உள்ளிட்ட ஆப்பிளின் கருவிகளில் ஏஐ இணைவுக்கான சோதனைகள் தொடங்கவுள்ளன.

கூகுளின் ஜெமினை உடனும் ஆப்பிள் இணையவுள்ளது. பல்வேறு ஏஐக்களில் இணைப்பதன் மூலம் போட்டியாளர்களை காட்டிலும் செலவினங்களை குறைக்கவும் வன்பொருள் உதிரிகள் பெறுவதில் பல வாய்ப்புகளையும் கொள்முதல் சங்கிலியில் தளர்வான சூழலையும் நிர்வகிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

பயனர்களின் தனியுரிமை சாந்த பாதுகாப்பையும் சந்தையில் சிறந்த ஏஐ செயலியை பயன்படுத்தும் வாய்ப்பையும் அளிக்கவுள்ள ஆப்பிளின் முடிவு பயனர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024