Sunday, September 29, 2024

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக 11 லட்சம் பேர் பயணம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக 11 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பாதுகாப்பாக, விரைவாக, சொகுசாக பயணம் செய்ய முடிவதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் 84.34 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 95.35 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், 11.01 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, ஜூலை 12-ம் தேதி அன்று 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூலைமாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 39.72 லட்சம் பேர், பயண அட்டை மூலம் 35.31 லட்சம் பேர், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 19.96 லட்சம் பேர்,டோக்கன் பயன்படுத்தி 30,675 பேர், குழு பயணச்சீட்டு முறையைபயன்படுத்தி 4,468 பேர் மெட்ரோரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று கூறினர்.

You may also like

© RajTamil Network – 2024