மேட்டூர் அணை நீர்மட்டம்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.93 அடியிலிருந்து 98.03 அடியாக குறைந்துள்ளது .

கர்நாடக மாநிலத்தில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.

தில்லியில் பிரதமா் மோடியுடன் முதல்வா் ஸ்டாலின் இன்று சந்திப்பு

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை காலை 98.93 அடியிலிருந்து 98.03 அடியாக குறைந்துள்ளது .

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,355 கன அடியிலிருந்து 2,694 கன அடியாக சரிந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 62.31 டிஎம்சியாக உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024