Monday, September 23, 2024

மேனன் அல்ல மெனன்..! பெயருக்கு விளக்கமளித்த நடிகை நித்யா!

by rajtamil
Published: Updated: 0 comment 18 views
A+A-
Reset

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா – 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

அடுத்தடுத்த படங்கள்

தற்போது காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இதற்கு 'டியர் எக்ஸஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திலும் நடித்து வருகிறார்.

திருச்சிற்றம்பலம் படத்துக்கு நித்யாவுக்கு தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

என்னால் குழந்தையைப் பெற்றெடுக்க இயலாது..! வருந்திய பாடகி செலீனா கோம்ஸ்!

அடையாளச் சிக்கல்

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனக்கு பின்னொட்டாக இருக்கும் பெயர் சாதியப் பெயர் கிடையாது. மேனோன் (மேனன்) அல்ல மெனன் என விளக்கமளித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளதில் நித்யா கூறியிருப்பதாவது:

யாருமே எனது பெயரை சரியாக புரிந்துகொள்ளவில்லை. எனக்கு அடையாளச் சிக்கல் இருக்கிறது. படப்பிடிப்பில் 2 ஷெட்யூல் முடிந்ததும், ‘மேடம், கொச்சிக்கு டிக்கெட் புக் செய்யட்டுமா? எனக் கேட்கிறார்கள். என்னுடைய காரை பாருங்கள். கன்னடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவராக 100க்கும் அதிகமான மதிப்பெண்கள் தரலாம்..! ஆர்த்தி ரவியின் வைரல் விடியோ !

மேனன் அல்ல மெனன்: பெயர் விளக்கம்

பெங்களூரில் இந்தப் பெயருக்கு முன்பு முன்னொட்டாக பெற்றோர்கள் பெயர் வைப்பது வழக்கமாக இருக்கிறது. அதுபோல நான் என்.எஸ்.நித்யா என சிறு வயதில் வைத்துக்கொண்டேன்.

என்- அம்மா பெயர் நளினி, எஸ்- அப்பா பெயர் சுகுமார். அதனால் இந்தப் பெயர். என்.எஸ். நித்யா என வைத்துக்கொண்டேன்.

இந்தப் பெயர் கடவுச்சீட்டில் சில பிரச்னைகளை கொண்டுவருமென்பதால் மெனன் எனும் பெயரை வைத்தேன். ஜோதிடம் பார்த்து மெனன் என வைத்தேன். சாதியின் பெயரைப் பயன்படுத்த எனக்கும் எங்களது குடும்பத்துக்கும் பிடிக்காது.

பெயரை கேட்பவருக்கு நான் எங்கிருந்து வந்தேன் எனத் தெரியக்கூடாது என வைத்தப் பெயர்தான் மெனன். ஆனால், அனைவரும் அதை கேரளத்தில் சாதியப் பெயரென (மேனோன்) நினைத்துக்கொண்டார்கள். நான் வைத்த பெயர் எனக்கே பாதிப்பாக அமைந்துவிட்டது என்றார்.

View this post on Instagram

A post shared by Nithya Menen (@nithyamenen)

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024