மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடை மழையினால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றன.

சித்திரைச்சாவடி அணைக் கட்டிலும் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடும் நிலையில், அருகாமையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர ஆரம்பித்திருக்கின்றன. கோயம்புத்தூர் மாநகரின் மிக முக்கியமான நீர் நிலையாக உள்ள பெரிய குளத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

மழைப் பொழிவுக்கு முன்பு நீர்மட்டம் குறைந்திருந்த நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மழை நீரானது குளத்தில் நிரம்ப ஆரம்பித்திருக்கிறது.

உக்கடம் குளத்தில் தண்ணீர் உயரும் நிலையில், மாநகரப் பகுதிகளில் நிலத்தடி நீருக்கு பஞ்சம் இருக்காது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பொழியும் அடைமழை நீடிக்கும் நிலையில், உக்கடம் மட்டுமின்றி கோயம்புத்தூரை சுற்றியுள்ள குளங்கள், நீர்நிலைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

நீர்நிலைகளுக்கு நீர் வருகின்ற வழி பாதை பராமரிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், நொய்யல் ஆற்றில் இருந்து உக்கடம் பெரிய குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் தடையின்றி சென்று, ஏரியின் முழு கொள்ளளவை நோக்கி நிரம்ப ஆரம்பித்திருக்கின்றது.

You may also like

© RajTamil Network – 2024