Sunday, September 22, 2024

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கொல்கத்தா,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. முன்னாள் எம்.பி.யான இவர் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் ஆதர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

முர்ஷிதாபாத் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சிதம்பரம் தற்செயலாக தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முடிவை எடுத்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. சில விசயங்களில் மல்லிகார்ஜுன கார்கே கருத்தில் வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024