மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – அதிரடி காட்டும் தமிழக அரசு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 15 துறைச் செயலர், 10 கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்று இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டார். ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜவுளித்துறை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலை துறை ஆணையராக ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அறநிலை துறை ஆணையராக இருந்த முரளிதரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதியோராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை ஆணையராக இருந்து சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை கலெக்டராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் குழந்தை நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் மேலும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

IAS Transfers and postings
(1/2)#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu@mkstalin@mp_saminathanpic.twitter.com/9hDUC8xFby

— TN DIPR (@TNDIPRNEWS) July 16, 2024

You may also like

© RajTamil Network – 2024