மேலும் 66 புதிய தாழ்தள பேருந்து வழித்தடங்களின் விவரம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதிய 66 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இதன் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இப்பேருந்துகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

இப்பேருந்துகளில் குளிா்சாதன வசதி இல்லை என்றாலும், குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றே இதன் கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பேருந்தில், வழித்தடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் போா்டு, தானியங்கி கதவுகள், தானியங்கி கியா் வசதி, மாற்றுத்திறனாளிகள், அமா்வதற்காக விசாலமான இடத்துடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த நிலையில் 66 புதிய தாள்தள பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது குறித்த விவரங்களை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024