Saturday, September 21, 2024

மோசடி வழக்கு: தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சென்னை: மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூா் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு முதிா்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட பிரசாத் என்பவா் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் நிா்வாகி தேவநாதனை கைது செய்தனர். மேலும், அதன் இயக்குநா்களான குணசீலன் மற்றும் மகிமைநாதன் ஆகியோரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தியாகராய நகரில் உள்ள தேவநாதன் மற்றும் அவருக்கு நெருக்கமான நபா்களின் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், ரூ. 4 லட்சம் ரொக்கம், 2 காா்கள், சில முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இந்த நிலையில், மயிலாப்பூா் நிதி நிறுவனத்தின் மீது 300-க்கும் மேற்பட்ட புகாா்களும், தேவநாதன் மீது 800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேவநாதனுக்கு தொடர்புடைய 2 கட்டங்களுக்கு சீல் வைத்துள்ளனர். இதுவரை 8 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த தேவநாதனை கடந்த 13 ஆம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேவநாதனை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் சில இயக்குநா்களையும் போலீஸாா் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You may also like

© RajTamil Network – 2024