Wednesday, October 2, 2024

யூடியூப் விடியோவால் மாதம் ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டும் லாரி ஓட்டுநர்!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

யூடியூப் விடியோவால் மாதம் ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டும் லாரி ஓட்டுநர்! லாரி ஓட்டுவதால் ரூ.25 ஆயிரம்தாம் வருவாய், ஆனால் யூடியூபில் விடியோ பதிவேற்றம் செய்வதால் ரூ. 5 லட்சம்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது பயணத்தை லாரியில் பதிவேற்றுவதன் மூலம் யூடியூபில் மாதம் ரூ. 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்.

25 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக உள்ள அவர், லாரி ஓட்டுவதன் மூலம் மாதம் ரூ. 25,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே ஊதியமாக ஈட்டுகிறார். ஆனால், யூடியூபில் லட்சக்கணக்கான வருவாய் ஈட்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகியுள்ளார்.

வடகிழக்கு ஜார்க்கண்டின் ஜாம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநரான ராஜேஷ், தினம்தோறும் லாரி ஓட்டி தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவருக்கு விபத்து நேரிட்டுள்ளது. இதில் கை பாதிக்கப்பட்ட நிலையிலும் குடும்பத்துக்காக லாரி ஓட்டும் கட்டாயத்தில் இருந்துள்ளார்.

லாரி ஓட்டுவது மட்டுமின்றி உணவு சமைப்பதிலும் ஆர்வம் கொண்ட ராஜேஷ், நீண்ட பயணத்தின்போது லாரியில் இருந்தவாறு சமைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டவர். இதனை தற்செயலாக விடியோ பதிவு செய்து, குரல் மூலம் மட்டும் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.

இதனை வழக்கமாக செய்து வந்த நிலையில், அவரின் சப்ஸ்கிரைபர்ஸ் முகத்தைக் காட்ட வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது மகனின் உதவியுடன் லாரி பயணத்தை விடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோவை ஒரே நாளில் 4.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து விடியோக்களை பதிவிட்டுள்ளார். தற்போது இவரை 1.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜேஷ் ரவானி, தனது யூடியூப் பயணம் குறித்தும், வருவாய் குறித்தும் பேசியுள்ளார். அதில், யூடியூபில் விடியோ பதிவேற்றம் செய்வதன்மூலம் தனக்கு மாதம் ரூ. 4 – 5 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் ரூ. 18 லட்சம் வருவாய் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார்.

பல யூடியூபர்ஸ் வெளிப்படையாக தங்களின் ஊதியத்தை அறிவிக்க தயங்கும் நிலையில், ராகேஷ் ரவானி தனது வருவாய் குறித்து பேசியுள்ளார்.

லாரி ஓட்டுவதன் மூலம் மாதம் ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும் நிலையில், யூடியூபில் அதிக வருவாய் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது, நாளொன்றுக்கு ரூ.500க்காக நாள் முழுவதும் லாரி ஓட்டும் நிலை தற்போது மாறியுள்ளது. இருந்தபோதும் நான் லாரி ஓட்டுவதை நிறுத்தப்போவதில்லை. என் கை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து லாரி ஓட்டி வருகிறேன். தற்போது சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். மேலும் என்னுடைய பொருளாதார பிரச்னைகள் அனைத்தும் தற்போது தீர்ந்துள்ளது. கடன் வாங்கி குடும்பம் நடத்திவந்த சூழல் யூடியூப் விடியோக்களால் மாறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024