ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது கடினமாக இருக்கிறது: ரஜினிகாந்த்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.'வேட்டையன்' படம் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது,

நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது… படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு கிட்ட சொன்னேன்..சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒருவர் எழுதுவார். இயக்கம் வேறு ஒருவர் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒருவர் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் என தெரிவித்தார்.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024