Friday, September 20, 2024

ரன்வீர் சிங், ஷாருக்கான் ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்த விராட் கோலி…எதில் தெரியுமா..?

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் 7-வது இடத்தில் உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் படைத்து வரும் பல சாதனைகளால் விளையாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் மிக பிரபலமானவர்.

அதே போல களத்திற்கு வெளியே இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர் என்ற மகத்தான பெருமைக்கும் விராட் கோலி சொந்தக்காரராக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் மீண்டும் விராட் கோலி நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார். பிராண்டு மதிப்புகளின் அடிப்படையில் விராட் கோலி இந்த பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில் ரன்வீர் சிங் 2-வது இடமும், ஷாருக் கான் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலர் இருந்த நிலையில் தற்போது அது 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலர் வரை உயர்ந்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலியைத் தொடர்ந்து பிராண்ட் மதிப்பின்படி 203.1 மில்லியன் டாலர் பெற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2-வது இடமும், ஷாருக் கான் 120.7 மில்லியன் டாலர் பெற்று 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் 7-வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 91.3 மில்லியன் டாலர் உடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024