Saturday, September 21, 2024

ரயிலில் வாட்டர் ஹீட்டருடன் பயணித்த இளம்பெண் கைது!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ரயிலில் வாட்டர் ஹீட்டருடன் பயணித்த இளம்பெண்ணை கைது செய்த போலீஸ்! – அதிர்ச்சியூட்டும் பின்னணி!கைது செய்யப்பட்ட பெண்

கைது செய்யப்பட்ட பெண்

கேரள மாநிலம் ஆலுவா ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டருடன் வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் பயணிப்பவர்கள் எதை எடுத்துச் செல்ல வேண்டும், எதை எடுத்துச் செல்லக் கூடாது என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், இந்திய ரயில்வே அது தொடர்பாக பயணிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், ரயிலில் வாட்டர் ஹீட்டருடன் வந்த 26 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், அவர் கைது செய்யப்பட்டது வாட்டர் ஹீட்டருக்காக அல்ல.

விளம்பரம்

கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடும், விற்பனையும் அண்மையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்துதான் இந்த போதைப்பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதை தடுப்பதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து ஆலுவா வந்த ரயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, எர்ணாகுளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, களமிறங்கிய காவல்துறையினர், நேற்றிரவு ஆலுவா வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அத்துடன் சந்தேகத்திற்கிடமான நபர்களையும் பிடித்து விசாரிக்கத் தொடங்கினர். அப்போது தான் 26 வயது இளம்பெண் ஒருவர் சிக்கினார். அவர் பெயர் சம்ரீன் அக்தர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற இவர், ஆலுவா ரயிலில் பெரிய லக்கேஜுடன் ஸ்லீப்பர் கோச்சில் பயணித்தார்.

விளம்பரம்

ஆலுவா ரயில் நிலையத்திற்கு வந்து காத்திருப்போர் அறைக்குச் சென்ற அவரை பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர், அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர் எதுவும் கூறாத நிலையில், அவர் பையில் இருந்த வாட்டர் ஹீட்டரை சோதனையிட்டனர். அதிலும் எதுவும் இல்லை. இருப்பினும், அந்த வாட்டர் ஹீட்டர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அதை பிரித்துப் பார்த்தபோது, உள்ளே இருக்க வேண்டிய எலக்ட்ரிக் பொருட்களுக்குப் பதிலாக, குழாய்களில் அடைக்கப்பட்ட எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

விளம்பரம்

ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ போதைப்பொருளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தியபோதுதான், டெல்லியில் இருக்கும் ஒருவர் மூலம் கேரளாவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இந்த போதைப்பொருளை 10 கிராம் பாக்கெட்டுகளாக அடைத்து, ஒவ்வொரு பாக்கெட்டும் தலா ரூ.3,000 வீதம் கேரளாவில் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : முன்னாள் காதலிக்காக ஆட்டோ டிரைவர் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த போதைப்பொருளை நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர்தான் நாடு முழுவதும் சப்ளை செய்து வருவதாகவும் இளம்பெண் சம்ரீன் அக்தர் தெரிவித்தார். இதனிடையே, சம்ரீன் அக்தரின் வருகைக்காக, ஆலுவா ரயில் நிலையத்தில் காத்திருந்த சபீர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லி விரைந்துள்ள தனிப்படையினர், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
abduction case
,
kerala
,
woman

You may also like

© RajTamil Network – 2024