ரவீந்திர ஜடேஜாவின் இடத்துக்கு குறிவைக்கிறாரா வாஷிங்டன் சுந்தர்?

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ரவீந்திர ஜடேஜாவின் இடத்துக்கு குறிவைக்கிறாரா வாஷிங்டன் சுந்தர்?இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் தனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டிருக்கும் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.ரவீந்திர ஜடேஜாவின் இடத்துக்கு குறிவைக்கிறாரா வாஷிங்டன் சுந்தர்?படம் | பிசிசிஐ

இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் தனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டிருக்கும் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் தனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எனக்கு நன்றாக வருபவற்றை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டிகளுக்காக என்னை சிறப்பாக தயார் செய்துகொள்ள வேண்டும். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் எனது 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். அதில் எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 15 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024