Saturday, September 21, 2024

ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம்

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

ரஷியாவில் விபத்தில் சிக்கிய பயணிகள் ரெயிலில் 14 பெட்டிகளில் மொத்தம் 232 பயணிகள் பயணித்து உள்ளனர்.

மாஸ்கோ,

ரஷியாவில் பயணிகள் ரெயில் ஒன்றின் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயிலில் பயணித்த 70-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி காயமடைந்து உள்ளனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. எனினும், உயிரிழப்புகள் பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.

வடகிழக்கு பகுதியான கோமி பகுதியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோஸிஸ்க் நகர் வரையிலான 5 ஆயிரம் கி.மீ. தொலைவை இந்த ரெயில் கடந்து செல்கிறது.

இதுபற்றி ரஷிய ரெயில்வே வெளியிட்ட செய்தியில், கோமி ரிபப்ளிக் பகுதியில் இன்டா நகர் அருகே, 511 என்ற எண் கொண்ட பயணிகள் ரெயிலானது உள்ளூர் நேரப்படி மாலை 6.12 மணியளவில் விபத்தில் சிக்கியது என தெரிவித்து உள்ளது.

அந்த ரெயிலில் 14 பெட்டிகள் இருந்தன. மொத்தம் 232 பயணிகள் ரெயிலில் பயணித்து உள்ளனர். கனமழை பெய்து வந்த நிலையில், அதனால் ரெயில் தடம் புரண்டு இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024