ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரிய தனது மனு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பிரிட்டன் அரசாங்கத்திடம் ராகுல் காந்தி சமர்ப்பித்த தகவல்கள் குறித்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந்தேதி சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது பிரிவை ராகுல் காந்தி மீறிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தனது புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பலமுறை கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் இதுவரை தனக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும் சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு, டெல்லி ஐகோர்ட்டில் வரும் வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024