ராஜபாளையம் அருகே புதிய நூலகம் திறப்பு

ராஜபாளையம் அருகே புதிய நூலகம் திறப்புவிருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணாபுரத்தில் ஊரகக் கிளை நூலகம் இருந்தது. இந்த நூலகக் கட்டடம் சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.22 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்து, நூலகக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய பள்ளிமாணவி பொற்கொடிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!