ராஜாவுக்கு அல்ல, ராணிகளுக்காக கட்டப்பட்ட அரண்மனை – எங்கே தெரியுமா?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ராஜாவுக்கு அல்ல, ராணிகளுக்காக கட்டப்பட்ட அரண்மனை – எங்கே இருக்கு தெரியுமா?ஜெய்பூர்

ஜெய்பூர்

உலகம் முழுவதும் ராஜாக்களுக்காக பல அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தாலும், இங்கிருக்கும் அரண்மனை ராணிகளுக்காகவே கட்டப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் என்று சொன்னதும் முதலில் நமது நினைவுக்கு வருவது அங்கிருக்கும் அரண்மனை தான். எனவே, ஜெய்ப்பூருக்கு சென்றவர்கள் இந்த அரண்மனையை பார்க்காமல் வர மாட்டார்கள். ஜெய்ப்பூர் நகரத்தில் ஆயிரக்கணக்கான பிரமாண்ட கட்டிடங்கள் இருந்தாலும், அந்த நகரத்தின் கிரீடம் என்று அழைக்கப்படுவது இந்த அரண்மனைதான். இந்த அரண்மனை 5 மாடிகளைக் கொண்டது. இதில் அழகாக செதுக்கப்பட்ட 953 ஜன்னல்கள் கடுமையான வெப்பத்திலும் முற்றிலும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

ஜெய்ப்பூரில் கட்டப்பட்ட இந்த ஹவா மஹால், 1799ஆம் ஆண்டு சவாய் பிரதாப் சிங் என்ற மகாராஜா தனது ராணிகளுக்காக கட்டப்பட்டது. ராணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் விஷேச நேரங்களில் அமர வைப்பதற்காக, தனித்துவமான முறையில் கட்டப்பட்டது. மேலும், ராணிகளுக்கு மிகவும் பிடித்தமான இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களை அரண்மனையில் பயன்படுத்தினார் மகாராஜா சவாய் பிரதாப் சிங்.

ஒவ்வொரு ஜன்னலிலும் உட்புகும் காற்றின் இளைப்பாறிக் கொண்டே ராணிகள், வெளிப்புற காட்சிகளை முழுமையாக ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது ஜெய்ப்பூரின் கிரீடம் என்பதைப் போல, காற்றின் அரண்மனை என்ற பெயரும் உண்டு. கோடை காலத்திலும் கூட, குளிர்ந்த காற்று அரண்மனைக்குள் வரும். அதனால், மக்கள் இதை ஹவா மஹால் என்றும் அழைக்கிறார்கள்.

விளம்பரம்

ஆனால், இந்த அரண்மனை ஜெய்ப்பூரின் கிரீடம் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, ஸ்ரீகிருஷ்ணரின் பக்தரான மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த அரண்மனையை கடவுளின் கிரீடத்தைப் போல வடிவமைத்தார். அப்போதில் இருந்தே அரண்மனை ஜெய்ப்பூரின் கிரீடம் என்று அழைக்கப்படுகிறது. ஹவா மஹாலில் முன்புறத்தில் இருந்து பார்த்தால், அதன் வடிவம் கிரீடம் போல தெரிகிறது. அரண்மனைக்குள் 3 கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த அரண்மனைக்குள் டீஜ் மற்றும் கங்கவுர் திருவிழாக்கள் அந்த காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவதாக, ஹவா மஹால் சுற்றுலா வழிகாட்டி அசோக் கரடியா தெரிவிக்கிறார். அன்றைய காலகட்டத்தில் ராணிகள் பார்க்க முடியாத சந்தையின் முக்கிய வீதிகள் வழியாக தீஜ் ஊர்வலம் நடந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

ராணிகள் ஓய்வெடுப்பதற்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட இந்த அரண்மனையின் கற்கள் மற்றும் வரைபடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. முன்பு ராணிகளால் வெளியே செல்ல முடியாது என்பதால், வெளியில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால், இந்த அரண்மனை கட்டப்பட்ட பிறகு ராணிகள் அனைவரும் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டங்கள் தொடங்கி, சண்டை சச்சரவுகள் உள்பட அனைத்தையும் பார்க்க முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்த அரண்மனையை கட்டடக் கலைஞர் லால் சந்திர உஸ்தாத் என்பவர் முகலாய மற்றும் ராஜபுத்திர பாணியில் வடிவமைத்து கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த அரண்மனையின் உள்ளே இருந்து வெளியில் அனைத்தையும் பார்க்க முடியும் என்றாலும், வெளியில் இருந்து இந்த அரண்மனைக்குள் நடக்கும் எதையும் பார்க்க முடியாது.

விளம்பரம்

இதையும் படிங்க:
த.வெ.க தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா… சென்னையில் நாளை நடக்கிறது!

ஹவா மஹாலுக்கு செல்வது எப்படி?

ஜெய்ப்பூரின் கிரீடமான ஹவா மஹாலை அடைய, நீங்கள் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இதன்பின்னர், உள்ளூர் ரயிலில் ஹவா மஹாலுக்குச் செல்லலாம். டெல்லி உள்பட பல மாநிலங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூரில் ஒரு பேருந்து நிலையமும் உள்ளது. அங்கிருந்து பேருந்துகள் கிடைக்கும். ஹவா மஹால் காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும். அரண்மனையைப் பார்க்க ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rajasthan

You may also like

© RajTamil Network – 2024