Sunday, October 27, 2024

ராவல்பிண்டியில் வரலாற்று சாதனை படைத்த சஜித் கான்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24இல் ராவல்பிண்டியில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 344 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தனது 2ஆவது இன்னிங்ஸில் விளையாடவிருக்கிறது.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் சஜித் கான் 4, நோமன் அலி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்ஸில் சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

மொத்தமாக சஜித் கான் 10 விக்கெட்டுகள், நோமன் அலி 9 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

ராவல்பிண்டி மைதானத்தில் ஒரு சுழல்பந்து வீச்சாளர் 10 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல்முறை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

First spinner to take a 1️⃣0️⃣-wicket haul in a Test match at Rawalpindi Cricket Stadium
What a stunning effort this has been from Sajid Khan #PAKvENG | #TestAtHomepic.twitter.com/ZzURBGbvA7

— Pakistan Cricket (@TheRealPCB) October 26, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024