ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்ற டிப்ளமோ மாணவர்..! எதற்கு தெரியும

ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்ற டிப்ளமோ மாணவர்..! எதற்கு தெரியுமா ?

பாம்பு பிடிக்கும் இளைஞர்

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என கேள்விப்பட்டிருப்போம். எவ்வளவு தைரியமான நபராக இருந்தாலும் பாம்பை பார்த்து பயம் வந்துவிடும். ஆனால் பாம்புகளை மீட்பதற்காகவே சில குழுவினர் பணியாற்றி வருகின்றனர் . இவர்கள் பாம்புகளை மீட்டு அவற்றை காடுகளில் கொண்டு சென்று விடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒருவர் 656க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் மாணவர் நிகிலா குமார் தான் அந்த இளைஞர்.

விளம்பரம்

இவர் அத்தாணி நகர், சித்தார்த்தா காலனியைச் சேர்ந்தவராவார். வனவிலங்கு பாதுகாப்பாளரான நிகிலா குமாருக்கு ஊர்வன மீது அதிக பிரியம். 14 வயதில் பள்ளிக்கு வந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டுள்ளார், சக மாணவர்களை பார்த்து பயம் கொள்ளாமல் தைரியமாக பாம்பை பிடித்துள்ளார். அங்கிருந்து தொடங்கிய பாம்பு மீட்பு இன்று 656 ஊர்வனவற்றைக் காப்பாற்ற உத்வேகம் அளித்துள்ளது. குறிப்பாக, விஷம் நிறைந்த நாகப்பாம்புகளைப் பாதுகாப்பதில் அவருக்கு அலாதியான ஆர்வம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

நிகிலா குமார், இவ்வளவு இளம் வயதிலேயே 600க்கும் மேற்பட்ட பாம்புகளைக் காப்பாற்றிய ஊர்வன பிரியர். வனவிலங்குகளைப் பாதுகாப்பது அவரது அசைக்க முடியாத அன்பு. 24 வயதான நிகிலா குமார், தற்போது பாகல்கோட் மாவட்டம், தெரடாலா நகரில் உள்ள ஜேபிஎம் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து கொண்டிருக்கிறார்.

இதையும் வாசிக்க : 80’ஸ் கிட்ஸ் முதல் 2 K கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் உணவகம்

BSF வீரர் மகாதேவின் மூத்த மகன் நிகிலா குமார் பாம்பு பிடிப்பதில் நிபுணராக மாறியுள்ளார். இவரது அசாத்திய திறனை கண்ட கிராம மக்கள் இவரை ஸ்னேக் நிகிலா குமார் என்று பெயர் வைத்துள்ளனர். நிகிலா குமார் தனது 12 வயதிலேயே இளம் வயதிலேயே பாம்பு மீட்பவர் என்ற பட்டத்தை வாங்கியுள்ளார். பாம்புகளை மீட்பது மட்டுமன்றி, ஊர்வனங்கள், ஆதரவின்றி சுற்றி திரியும் தெரு நாய்களை மீட்டுப்பது, அவைகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் உணவு கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் தனது முழு மனதுடன் செய்து வருகிறார்.

விளம்பரம்

மேலும் இதுகுறித்து பேட்டியளித்த நிகிலா குமார், தனது 14 வயதிலேயே விலங்குகளை மீட்கும் பணிகளை செய்து வருவதாகவும், அடிபட்டு கிடைக்கும் தெரு நாய்களை கண்டால் கூட அதனை அழைத்து சென்று சிகிச்சை அளித்து சரியாகும் வரை பார்த்து பின்னர் அதனுடைய வாழ்விடத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்

மேலும் விலங்குகளை மீட்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் என்ற விருதையும் நிகிலா குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
snake
,
Tamilnadu

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset