Friday, September 20, 2024

ரூ.2 கோடி வாட்ச் பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த முகேஷ் அம்பானி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

ஷாரூக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோருக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு… விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகேஷ் அம்பானி!ரூ. 2 கோடி வாட்ச்சுடன் விருந்தினர்கள்

ரூ. 2 கோடி வாட்ச்சுடன் விருந்தினர்கள்

மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தில் பங்கேற்ற ஷாரூக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட திருமணம் முடித்த பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக அளித்துள்ளார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இது தொடர்பான புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அனைத்து விருந்தினர்களையும் முக மலர்ச்சியுடன் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி இருவரும் வரவேற்று, திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க வைத்தனர்.

விளம்பரம்

இந்நிலையில் மகனின் திருமணத்தில் பங்கேற்ற திருமணம் முடிந்த விருந்தினர்கள் சிலருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை முகேஷ் அம்பானி பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

விளம்பரம்

Audemars Piguet லிமிடெட் எடிஷன் என்ற ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை தான், ஷாரூக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட விருந்தினர்கள் சிலருக்கு முகேஷ் அம்பானி பரிசாக அளித்துள்ளார்.

இதையும் படிங்க – அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டை வாழ்த்திய தோனி… இணையத்தில் லைக்ஸை குவிக்கும் ஃபோட்டோ!

இதன் சந்தை மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 கோடி. இந்நிலையில், ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்று வரும் மங்கள் உத்சவ் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறவுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024