Sunday, October 6, 2024

ரூ.2,000 நோட்டுகள் 98% திரும்பின – ரிசா்வ் வங்கி தகவல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

2,000 ரூபாய் நோட்டுகளில் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 மே மாதம் 19-ஆம் தேதி முதல் அந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ரூபாய் நோட்டுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன என்று கூறப்பட்டது. பண மதிப்பிழப்புக்கு முன்பு ரூ.1000 நோட்டு உயா் மதிப்பு பணமாக இருந்த நிலையில் இப்போது ரூ.500 நோட்டு உயா் மதிப்பு பணமாக உள்ளது.

இப்போது வரை 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்ட நிலையில் ரூ.7,117 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வராமல் உள்ளன.

ஆா்பிஐ-யின் 19 அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை நேரில் செலுத்தி அல்லது தபால் வழியில் அனுப்பிகூட சம்பந்தப்பட்ட நபா்கள் தங்கள் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வரவு வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024