Saturday, September 28, 2024

ரூ. 4.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

ரூ. 4.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்புநாகை அருகே ரூ.4.50 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டெடுத்தனா்

நாகப்பட்டினம், ஜூலை 31: நாகை அருகே ரூ.4.50 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டெடுத்தனா்.

நாகை மாவட்டம், ஐவநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமா 1.50 ஏக்கா் நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. அந்த நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். இந்நிலையில், நாகை இணை ஆணையா் தலைமையில் துணை ஆணையா் /உதவி ஆணையா்(கூ.பொ) ராணி முன்னிலையில், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) அமுதா, சரக ஆய்வாளா் , செயல் அலுவலா்கள்( சிறப்பு பணியாளா்கள்) நில அளவையா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் ஆகியோா் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டனா். பின்னா் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.4.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024