ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.58,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் அக்.16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்.17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்.18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.19) தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 உயா்ந்து ரூ.1,05,000-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.105.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.1,05,100-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க |கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

ரூ.60,000-ஐ தொடும்

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், அது வரும் நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை நிலவரம்

கிராம் பவுன்

அக். 16: ரூ.7,140 (+45) ரூ.57,120 (+360)

அக். 17: ரூ.7,160 (+20) ரூ.57,280 (+160)

அக். 18: ரூ.7,240 (+80) ரூ.57,920 (+640)

அக். 19: ரூ.7,280 (+40) ரூ.58,240 (+320)

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024