Saturday, September 21, 2024

ரேபரேலி தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ரேபரேலி தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி.. வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்திராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி

மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உ.பியில் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர் 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதி.

இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு அல்லது ரேபரேலி ஆகிய இரண்டில் எதை அவர் ராஜினாமா செய்வார் எனவும், அதில் போட்டியிடப் போவது யார் என்பதும் பேசுபொருளாகி வந்தது. உ.பியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ரேபரேலியில் அவர் எம்.பியாக தொடர்வார் என்றும் வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

விளம்பரம்

Also Read :
திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி – யார் யாருக்கு தெரியுமா?

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனகார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் உத்திரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைக்கிறார் என்றும் வயநாடு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்கமாட்டேன். வயநாடு தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.

You may also like

© RajTamil Network – 2024