Friday, September 20, 2024

ரேஷன் கடைகள் 31-ம் தேதி இயங்கும் என அறிவிப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

வருகிற 31-ம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

வருகிற 31-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 31.08.2024 அன்று அனைத்து ரேஷன் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024