Wednesday, September 25, 2024

ரோந்துப் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி:  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ரோந்துப் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிக்குமார் (59) என்பவர் நேற்று (செப்.3) காலை மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

முதல்நிலைக் காவலர் ரவிக்குமாரின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ரவிக்குமார் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று அவர் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024