லாவோஸ் நாட்டின் இணைய மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் மீட்பு!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

லாவோஸ் நாட்டின் இணைய மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் அங்கிருந்த இந்திய தூதரகத்தால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

லாவோஸ் நாட்டில் போலி வேலை வாய்ப்புகள் மூலம் அதிகம் ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவதில் கவனத்துடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் சார்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டிலிருந்து இதுவரை 635 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Embassy of India successfully rescues 47 Indians trapped in cyberscam centres in Golden Triangle SEZ of Lao PDR. Detailed press release below: pic.twitter.com/Ap4BTJYP7c

— India in Laos (@IndianEmbLaos) August 31, 2024

மேலும், போக்கியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் இன்று மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத செயல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இவர்களில் 29 பேர் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 18 பேர் உதவி கோரி தூதரகத்தை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு கேட்கும் மூன்றாம் பாலினத்தவர்கள்!

தூதரக அதிகாரிகள் போக்கியோ நகரில் அவர்களை மீட்டு வந்ததில் இருந்து அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியத் தூதரக அதிகாரி பிரசாந்த் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த 30 இந்தியர்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாகவும், மீதமுள்ள 17 பேர் பயணத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியா வந்து சேர்வார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பயணத்தின் போது லாவோஸ் நாட்டின் பிரதமரைச் சந்தித்து அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து விவாதித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13 பேர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024