வக்ஃபு வாரிய மசோதா – நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா – மக்களவையில் வந்த எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா - மக்களவையில் வந்த எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவில் வக்ஃபு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

விளம்பரம்

ஆனால் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் வகையில் சட்ட திருத்தம் உள்ளது மத நம்பிக்கைக்கு எதிரானது என கூறினார்.

இதையும் படிக்க:
பிரதமர் கிசான் யோஜனாவின் 18வது தவணை கிடைக்க இதை செய்யுங்கள்… இல்லாவிட்டால் சிக்கல்தான்!

இதனைத் தொடர்ந்து மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, வக்ஃபு வாரியத்தில் மற்ற மதத்தினரை அனுமதிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது எனவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் நிலையில், மதச் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஆபத்தானது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மக்களவையில் தெரிவித்தார்.

மதத்தால் நாட்டு மக்களை பிரித்தாளும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். வக்ஃபு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்களை செய்ய வழிவகுக்கும் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், மத்திய அரசு முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று என்று காட்டமாக விமர்சித்தார்.

விளம்பரம்
நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்… ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை..
மேலும் செய்திகள்…

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா யாருடையை உரிமையையும் பறிக்காது என்று விளக்கமளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இதுவரை அதிகாரமற்றவர்களுக்கு உரிய அதிகாரத்தை மசோதா வழங்கும் என குறிப்பிட்டார். மத ரீதியான அமைப்புகளின் சுதந்திரம் மீது எந்த தலையீடும் இந்த மசோதாவால் இருக்காது என்றும் கூறினார்.

பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்க அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒப்புதல் தெரிவித்தார். இதனிடையே, வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament

You may also like

© RajTamil Network – 2024