வக்ஃப் சட்டம் – மத்திய அரசு செய்யப் போகும் மாற்றங்கள் என்ன?

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

வக்ஃப் சட்டம் – மத்திய அரசு செய்யப் போகும் மாற்றங்கள் என்னென்ன?வக்ஃப் சட்டம் - மத்திய அரசு செய்யப் போகும் மாற்றங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டில் அதிக பொறுப்புணர்வையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முஸ்லீம் சமூகத்தின் கோரிக்கையின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வக்ஃப் என்பது மசூதி, தர்கா, தங்குமிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் தானமாக கொடுக்கப்பட்ட சொத்தாகும். இது முஸ்லீம் செல்வந்தர்கள் மற்றும் முஸ்லீம் ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்ட சொத்துகள் என்று கூறப்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் வக்ஃப் வாரிய சட்டம் திருத்தப்பட்டது. பின்னர், மீண்டும் அதை ஒழுங்குபடுத்துவதற்காக 2013ஆம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் செய்தது.

விளம்பரம்

வக்ஃப் வாரியம் தானமாக கொடுக்கப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தவும், பாதுகாக்கவும், மற்றும் அத்தகைய சொத்தை மாற்றவும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். தற்போதைய சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரின் கீழ் ஒரு வக்ஃப் வாரியத்தை அமைக்க அனுமதி உள்ளது. மாநில அரசாங்கத்தின் ஒன்று அல்லது இரண்டு பேர், முஸ்லீம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில பார் கவுன்சிலின் முஸ்லீம் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய இறையியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் அதில் இடம்பெற்று இருப்பார்கள்.

வக்ஃப் வாரியத்தின் அசையா சொத்துகளை நிர்வகிக்கவும், இழந்த சொத்துகளை மீட்கவும், விற்பனை, அன்பளிப்பு, அடமானம் அல்லது குத்தகை விடுவதற்கான அனுமதியளிக்கும் அதிகாரம் இந்த குழுவினருக்கு உண்டு.

விளம்பரம்

வாரியத்தின் அதிகாரங்கள் : இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் வருவாய்த் துறையின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை வக்ஃப் வாரியம் உரிமை கோர முடியாது. அந்த நிலங்கள் உண்மையில் வக்ஃப் சொத்து என்பதை வாரியம் நிரூபிக்க வேண்டும்.

பிரிவு 40: வக்ஃப் சட்டம் 1995 (2013ல் திருத்தப்பட்டபடி) பிரிவு 40ன் படி குறிப்பிட்ட சொத்து வக்ஃப் சொத்தா, இல்லையா என்பது குறித்து எழும் எந்த கேள்வியையும் தீர்மானிக்க மாநில வக்ஃப் வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. வக்ஃப் அல்லது ஷியா வக்ஃப் வாரியம் தகுந்ததாக கருதும் விசாரணைக்குப் பிறகு வழக்கை தீர்மானிக்கிறது. தீர்ப்பாயத்தால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது திருத்தப்பட்டாலோ தவிர, கூறப்பட்ட விதியின் கீழ் ஒரு கேள்வியில் வாரியத்தின் முடிவு இறுதியானது என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு : பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா வக்ஃப் சட்டம் 1995ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமய அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான குறியீட்டை கொண்டு வர உத்தரவிடுமாறு கோரினார். ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னவாக இருக்கும்?

நாட்டில் 30 வக்ஃப் வாரியங்கள் இருக்கும் நிலையில், அதன் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. வக்ஃப் வாரியங்கள் தங்கள் சொத்துகளை உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

அனைத்து வக்ஃப் வாரிய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை தீவிரமாக ஆராய்வது குறித்த ஷரத்துகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:
”இது வெறும் டிரைலர் தான்” – கனமழை குறித்து ஷாக் கொடுத்த வெதர்மேன்!

முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, பல்வேறு மாநில வாரியங்களால் கோரப்படும் சர்ச்சைக்குரிய நிலங்களை மீண்டும் சரிபார்க்க கோரப்படும் என்று கூறப்படுகிறது.

வக்ஃப் வாரிய அமைப்புகளில் பெண்களை சேர்ப்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, வக்ஃப் சட்டத்தில் சுமார் 40 திருத்தங்கள் மூலம் வக்ஃப் சொத்துகளின் நிலை மற்றும் தன்மையை மாற்றியமைக்க அரசு விரும்புவதாகவும், அதன் மூலம் அவற்றின் உடைமை எளிதாகும் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
law
,
Parliament
,
Rajya Sabha
,
Union Govt
,
wakf Board

You may also like

© RajTamil Network – 2024