Saturday, September 21, 2024

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது. இது அடுத்த 2 அல்லது 3 தினங்களில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரையை அடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும் எனவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024