டாக்கா / பெங்களூரு: அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது.
நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அதானி பவர் முயல்கிறது என்று வங்கதேசத்தின் கிரிட் ஆபரேட்டர் மற்றும் நிறுவனத்தின் நடவடிக்கையை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட 1,600 மெகாவாட் கோடா ஆலையிலிருந்து டாக்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் அதானி பவர், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து சுமார் 1,400 முதல் 1,500 மெகாவாட்டிலிருந்து இந்த மாதம் 700 மெகாவாட் முதல் 750 மெகாவாட்டாக விநியோகத்தை குறைத்துள்ளது.
இந்நநிலையில், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில், விநியோகம் சுமார் 520 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது என்று வங்கதேசத்திற்கான மின் மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் படிப்படியாக நிலுவைத் தொகையை செலுத்தி வருகிறோம், யாராவது விநியோகத்தை நிறுத்தினால் மாற்று நடவடிக்கைகளை எடுப்போம். எந்தவொரு மின் உற்பத்தியாளரும் எங்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம் என்று வங்கதேசத்திற்கான காபந்து அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகரான முகமது ஃபவுசுல் கபீர் தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகையை விரைவுபடுத்தியுள்ள போதிலும், அதானியின் குழுமம் அறிவித்த நவம்பர் 7-ஆம் தேதி பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவிலான மின்சார விநியோகம் வங்கதேசம் பெறுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கதேசத்திற்கான தேவை மற்றும் நிலுவைத் தொகையை மனதில் வைத்து மின்சாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதானி பவர் வட்டாரம் தெரிவித்துள்ளது.