வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு இடமில்லை!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி சேர்க்கப்படவில்லை.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம்.

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை மீட்பு!

முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி சேர்க்கப்படவில்லை.

Pakistan's 12 for the second Test #PAKvBAN | #TestOnHaipic.twitter.com/9TprXzdzjx

— Pakistan Cricket (@TheRealPCB) August 29, 2024

இது தொடர்பாக பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பேசியதாவது: இரண்டாவது போட்டியில் ஷாகின் ஷா அஃப்ரிடிக்கு ஓய்வளிக்கப்படுவது குறித்து அவரிடம் பேசினோம். அவர் சூழ்நிலையை நன்றாக புரிந்துகொண்டார். இந்த ஓய்வானது அண்மையில் தந்தையாக மாறிய ஷாகின் ஷா அஃப்ரிடிக்கு குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட உதவியாக இருக்கும் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி விவரம்

ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணைக் கேப்டன்), அப்ரார் அகமது, அப்துல்லா ஷஃபீக், பாபர் அசாம், குர்ரம் ஷாஷத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் ஆயுப், மற்றும் சல்மான் அலி அகா.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நாளை (ஆகஸ்ட் 30) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024