Saturday, September 21, 2024

வங்கதேச அணிக்கு எதிராக கவனமாக இருங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

இலங்கை வீரர், வீராங்கனைக்கு ஐசிசி விருது!

கவனமாக இருங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியிடம் கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று, தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை வங்கதேச அணி காட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதும், வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் அவர்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு மேலோங்கி இருக்கும்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம்: டிராவிஸ் ஹெட்

வங்கதேச அணியில் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. சிறப்பாக விளையாடத் தவறினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பறிபோகும் என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

குறைந்தது 5 வெற்றிகள் தேவை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் தொடங்கி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக விளையாடும் 10 போட்டிகளில் இந்திய அணி குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த நான்கு மாதங்களில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற, இந்த 10 போட்டிகளில் இந்திய அணி குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் எளிதாக இருக்கப் போவதில்லை என்றார்.

சவாலான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம்: வங்கதேச கேப்டன்

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024