Tuesday, September 24, 2024

வங்கதேச அணியை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: ரிஷப் பந்த்

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset

வங்கதேச அணியை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேச அணியை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், இந்திய அணி அதன் திறமைகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற அணிகள் ஆசியாவில் நன்றாக விளையாடுபவை. ஏனென்றால், அவர்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை நன்கு பழக்கப்பட்டிருக்கும். இந்திய அணி அதன் திறமைகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எப்படி நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும்.

எதிரணி யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து விளையாட வேண்டும். சர்வதேச தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எந்த ஒரு தொடரையும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி தோல்விக்கான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. அனைத்து அணிகளும் நன்றாக விளையாடுகின்றன என்றார்.

ஆஸி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024