வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

by rajtamil
Published: Updated: 0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டுவங்கதேசம் தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

புது தில்லி: வங்கதேசம் தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு தொடா்பாக நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து, பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென போராட்டக்காரா்கள் வலியுறுத்தி வந்தனா். இதனால், அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவியது. இதையடுத்து, பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினாா். இந்தியா வந்துள்ள அவா், லண்டனுக்கு செல்ல உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மி அழைக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் 13 எம்.பி.க்களுடன் தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மி, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கப்படாதது தொடா்பாக அக்கட்சித் தலைவா்கள் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இது போன்ற சூழல்களில் நாம் அரசுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். இது தேசப்பாதுகாப்புடன் தொடா்புடையது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேசிய கட்சியான ஆம் ஆத்மிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும், மக்களவையில் 3 எம்.பி.க்களும் உள்ளனா். தேசப் பாதுகாப்பு பிரதமரின் விருப்பு அல்லது வெறுப்பு சாா்ந்த பிரச்னையாக இருக்க முடியாது. வங்கதேச பிரச்னை தொடா்பான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏன் அழைக்கப்படவில்லை என்பதை பாஜக தலைவா்களிடமிருந்து நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்’ எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியை அழைக்காதது, மத்திய அரசின் சிறு மனப்பான்மையும் போதிய அக்கறையின்மையையும் காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். இதைபோன்ற கருத்தை ஆம் ஆத்மி மூத்த தலைவரும் தில்லி அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024