Friday, September 20, 2024

வங்காளதேச வன்முறை எதிரொலி: டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவை ரத்து

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்கள் வங்காளதேச தலைநகருக்கான அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்துள்ளன. அதேபோல ஏர் இந்தியா நிறுவனமும் டாக்காவிற்கு செல்ல இருந்த காலை விமானத்தை ரத்து செய்துள்ளதாகவும், டாக்காவிற்கு மாலை விமானத்தை இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. அதேபோல ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு தினசரி 2 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024