வடகிழக்கு சீன நகரத்தில் பெய்த கனமழையால் 11 பேர் பலி

பிஜீங்,

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நகரின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக தினசரி மழைப்பொழிவு 52.8 செ.மீ. பதிவானதாகவும், அரை நாளில் ஒரு வருட மதிப்புள்ள மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது 1951ல் வானிலை பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஹுலுடாவ் நகரில் பெய்த வலுவான மழையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!