வடகொரிய தூதரக அதிகாரிக்கு தென்கொரியாவில் மந்திரி பதவி

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

கிம் ஜாங் அன்னின் பல நடவடிக்கைகளால் டே யோங்ஹோ அதிருப்தி அடைந்தார்.

சியோல்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வடகொரியாவுக்கான தூதரக அதிகாரியாக பணியாற்றியவர் டே யோங்ஹோ (வயது 61). அப்போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மரண தண்டனை, அணு ஆயுத சோதனை உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் அவர் அதிருப்தியடைந்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு அவர் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்தார். ஆனால் அரசாங்க பணத்தை மோசடி செய்ததாக வடகொரியா அவர் மீது குற்றம் சாட்டியது.

இதற்கிடையே டே யோங்ஹோ 2020-ம் ஆண்டு தென்கொரிய நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது அவர் அமைதிக்கான ஒருமைப்பாட்டு ஆலோசனைக்குழுவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இக்குழு கொரிய ஒருங்கிணைப்பு குறித்து அதிபருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. துணை மந்திரி அந்தஸ்தில் உள்ள இப்பதவியானது இதுவரை தென்கொரியாவில் குடியேறிய வடகொரியருக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய பதவி ஆகும்.

You may also like

© RajTamil Network – 2024