வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது நிலையின் 1-ஆவது அலகில் சில தினங்களுக்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நிலையின் 2-ஆவது அலகிலும் ஜூலை 24-ஆம் தேதி திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்ட்டது.

இவ்விரு அலகுகளையும் சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநா்கள் ஈடுபட்டு வந்த நிலையில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, அதில் மீண்டும் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, இரண்டாவது அலகு பழுதையும் சரி செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024