Tuesday, September 24, 2024

வட்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பாராலிம்பிக் தொடரின் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 28ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 5ஆம் நாளான இன்று (செப். 2) ஆடவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் எஃப் 56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா பங்கேற்றார்.

27 வயதான இவர், 42.22 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்து முதலிடம் பிடித்தார். பாராலிம்பிக்கில் இந்த சீசனில் சிறப்பான ஆட்டமாகவும் இது அமைந்துள்ளது.

கடந்தமுறை டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 44.58 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக இரு பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த இவர், 2023, 2024-ல் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

நாட்டிற்காக பதக்கம் வென்றதன் பிறகு பேசிய யோகேஷ் கதுனியா, போட்டி சிறப்பாக அமைந்தது. எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. அடுத்தமுறை என்னுடைய பதக்கத்தின் நிறத்தை மாற்றுவதற்காக கடுமையாக உழைப்பேன்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ஐஐடி பட்டதாரி: யார் இந்த நிதேஷ் குமார்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன். உலக சாம்பியன்ஷிப் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப் என எங்கு சென்றாலும் வெள்ளிப் பதக்கம் கிடைக்கிறது. இதில் சிக்கிக்கொண்டதைப் போன்று உணர்கிறேன். நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இன்று என்னுடைய நாள் இல்லை என நினைக்கிறேன். என்னுடைய ஆட்டம் சீராக இருந்தது. அதற்கான நான் மகிழ்ச்சியும் அடையவில்லை. என்னுடைய குடும்பம் மகிழ்ச்சி அடையும் என நினைக்கிறேன். அவர்கள் இதனைக் கொண்டாடுவார்கள் என யோகேஷ் குறிப்பிட்டார்.

பாராலிம்பிக்: வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்!

You may also like

© RajTamil Network – 2024