வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிவண்டலூர் உயிரியல் பூங்காவில் 12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.வண்டலூர் உயிரியல் பூங்காவண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நடவடிக்கையாக சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ், அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் 12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இதை பூங்காவின் இயக்குநர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவத்சவா, ‘ஷரோன் பிளையின்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு கெமானி ஆகியோர் சனிக்கிழமை தொடங்கிவைத்தனர்.

இதன்மூலம், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தங்களது சொந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதை ஊக்குவிக்கிறது. மேலும், பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை குறைக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.

இந்த விழாவில் பூங்காவின் துணை இயக்குநர் எச்.திலீப் குமார், உதவி இயக்குநர் பொ.மணிகண்ட பிரபு மற்றும் பூங்கா அலுவலர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024