Saturday, September 21, 2024

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட மாதிரி புகைப்படத்தை அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பெங்களூரு: வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட மாதிரி பெட்டி புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் மாதிரி பெட்டியின் புகைப்படத்தை பெங்களூரில் உள்ள ‘பாரத் எா்த் மூவா்ஸ் (பிஇஎம்எல்)’ நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நிகழ்வில் வெளியிட்டாா்.

பின்னர், பிஇஎம்எல் நிறுவன வளாகத்தில் புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலைக்கு அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினாா்.

ஆந்திரம், தெலங்கானா கனமழை: 20 ரயில்கள் ரத்து; 30 ரயில்கள் வழித்தடம் மாற்றம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் மாதிரி பெட்டியின் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது. பெங்களூரில் உள்ள பாரத் நிறுவனத்தின் வளாகத்தில் அதன் சோதனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அடுத்த 10 நாள்களுக்கு நடைபெறும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தண்டவாளங்களில் அது பரிசோதிக்கப்படும். இந்த சோதனை நடைமுறை முடிவடைந்ததும் அடுத்த மூன்று மாதங்களில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என வைஷ்ணவ் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024