வயநாடு : குழந்தைகளை தத்து கேட்ட நபர் – அமைச்சர் சொன்ன உருக்கமான பதில்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்து கேட்ட நபர் – அமைச்சர் சொன்ன உருக்கமான பதில்வயநாடு சோகம்

வயநாடு சோகம்

வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தையை தன்னிடம் தாருங்கள் என நபர் ஒருவர் முகநூலில் பதிவிட்ட பதிவிற்கு, கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் உருக்கமுடன் பதிலளித்துள்ளார்.

கேரளாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க சிலர் தயாராக உள்ளனர். இதே போன்று, தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்பால் கொடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர் தனக்கு குழந்தை இல்லை என்றும் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தையை தன்னிடம் தாருங்கள் எனவும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்

அதற்கு பதிலளித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவரது கருணைக்கு இதயத்தின் ஆழ்மனதில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், வலியை முற்றிலும் புரிந்து கொள்ள முடிகிறது எனவும் பதிவிட்டுள்ளார். தங்களின் இதயத்தில் இருந்து வெளியேறிய வார்த்தைகள் தனக்கு கண்ணீரை வரவழைப்பதாகவும் வீணா ஜார்ஜ் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10.5% இடஒதுக்கீடை விட அதிகம் பயன்பெறும் வன்னியர்கள் – RTI-ல் வெளியான தகவல்

சட்டத்தின் படி, பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசாங்கமே கவனித்து வருவதாகவும், தத்தெடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி, பதிவு செய்து குழந்தை தத்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் சுதீஷிக்கு வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Wayanad
,
Wayanad Landslide 2024

You may also like

© RajTamil Network – 2024