வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

கோழிக்கோடில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசிய நவ்யா ஹரிதாஸ், இந்தியாவை பொருத்தவரை பிரியங்கா காந்தி புதிய முகம் இல்லை. ஆனால் வயநாட்டில் அவர் புதியவர்.

நாடாளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காக அவா் இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை. ராகுல் காந்தியின் குடும்பத்தின் பிரதிநிதியாகவே அவா் போட்டியிடுகிறார் என குற்றம்சாட்டினார்.

வயநாடு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு மீண்டும் ராகுல் காந்தி குடும்பத்தினருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தங்களுடன் இருந்து நலத்திட்டங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வயநாடு தொகுதி மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அவர் ரேபரேோலி தொகுதியை கைவசம் வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை

மக்களுக்கான நலத்திட்டங்களை எம்.பி.யாக ராகுல் காந்தி 5 ஆண்டுகளும் மேற்கொள்வாா் என நினைத்து வாக்காளா்கள் அவரை வெற்றிபெறச் செய்தனா். ஆனால் அவா் ரேபரேலி தொகுதியை கைவசம் வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை கைவிட்டு மக்களை ஏமாற்றியுள்ளாா்.

இதையும் படிக்க |ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

எனவே, வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை தற்போது உணர்ந்துள்ள அந்த தொகுதி மக்கள், வருகின்ற இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றிபெறச் செய்வாா்கள். நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வயநாட்டில் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தவர், வயநாடு தொகுதி மக்கள் தங்களுக்கு ஆதரவான மற்றும் தங்களது பிரச்னைகளை தீர்க்கும் தலைவரைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்ட நிலையில், கோழிக்கோடு மாநகராட்சியில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் இளம் பெண் தலைவரான நவ்யா ஹரிதாஸ், வயநாடு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்.

கடந்த மக்களவைத் தோ்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றதை அடுத்து வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024