Tuesday, November 5, 2024

வயநாடு நிலச்சரிவு – அமித் ஷா, பினராயி விஜயன் மாறி மாறி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவு – அமித் ஷா, பினராயி விஜயன் மாறி மாறி குற்றச்சாட்டு!முதலமைச்சர் - உள்துறை அமைச்சர் பரஸ்பரம் குற்றச்சாட்டு

முதலமைச்சர் – உள்துறை அமைச்சர் பரஸ்பரம் குற்றச்சாட்டு

வயநாட்டில் கனமழை, நிலச்சரிவு அபாயம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜெபி மாதர் (jebi mather) உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, பேசிய ஜெபி மாதர், வயநாட்டில் பேரிடர் ஏற்படும் முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கத் தவறிவிட்டதாக விமர்சித்தார்.

விளம்பரம்

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வயநாட்டில் பேரிடர் நிகழ்வதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே ஜூலை 23 ஆம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார். ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் ஜூலை 26 ஆம் தேதி மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:
திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்… உடல்களை தேடி அலையும் உறவினர்கள்.. கலங்கடிக்கும் வயநாடு

விளம்பரம்

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த ஒன்பது குழுக்களை ஜூலை 23 ஆம் தேதியே கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகும் கேரள அரசு விழித்துக் கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார். கேரள அரசு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் குற்றஞ்சாட்டினார். எனினும், நிவாரணப் பணிகளில் கேரள அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,
இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்ததாகக் கூறினார். வயநாட்டில் 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாகவும், இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம் என்றும் கூறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய பினராயி விஜயன், குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்
1000 கோடிக்கு மேல் வசூல் செய்த 6 இந்திய இயக்குநர்கள்.!
மேலும் செய்திகள்…

இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ராணுவம் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். மீட்பு பணிகள் மற்றும் இயற்கை பேரிடர் தடுப்பு விவகாரங்களில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு வருகின்றனர். நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மெப்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் புனித ஜோசப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். மேலும், Moopen மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amit Shah
,
Chief Minister Pinarayi Vijayan
,
kerala
,
Landslide
,
Landslide Death

You may also like

© RajTamil Network – 2024