வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அருகே மண்சரிவு – மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 78 பேரை தேடும் பணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவின் மையப் பகுதியான புஞ்சிரிமட்டத்திற்கு அருகே இன்று மீண்டும் ஒரு மண்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு தேடுதல் பணி மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024