Saturday, September 21, 2024

வயநாடு நிலச்சரிவு : தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 25 பேர் மாயம்!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவு : தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 25 பேர் மாயம்!வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு

கேரளாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 25 பேர் நிலச்சரிவில் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புப் பணிகளை கவனிக்கும் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட மெப்பாடி, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில், வேலை நிமித்தமாக வயநாட்டில் தற்காலிகமாக வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

விளம்பரம்

இதே போன்று, பணி நிமித்தமாக வயநாட்டில் தற்காலிகமாக வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை காணவில்லை. மேலும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேரையும் காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக காணாமல் போன தமிழ்நாட்டை சேர்ந்த 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லும் – சிங்கப்பெண்

இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 130 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Wayanad

You may also like

© RajTamil Network – 2024