Wednesday, November 6, 2024

வயநாடு நிலச்சரிவு: 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு…

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு… வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் 4வது நாளில் நடந்தது என்ன?வயநாடு

வயநாடு

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி, 4 நாட்களுக்கு பிறகு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரல்மலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படவேட்டிக்குன்னுவில் இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. சிதிலமைடந்த ஒரு வீட்டிற்குள் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பாதுகாப்பாக மீட்ட இந்திய ராணுவத்தினர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டனர்.

விளம்பரம்

மீட்கப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் ஜானி என்றும், அவர் சொந்தமாக தோட்டம் வைத்து பராமரித்து வந்ததாகவும் மெப்பாடி பஞ்சாயத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தை சேர்ந்த ஜோன்மோள், கிறிஸ்டி, எப்ரஹாம் உள்ளிட்டோரும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு பெண்ணிற்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக இந்திய ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நிலச்சரிவின் போது அவர்கள் உயரமான இடத்திற்கு சென்றதால் உயிர் பிழைத்ததாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே நிலச்சரிவு காரணமாக மெப்பாடி- சூரல்மலை இடையே பொது போக்குவரத்து 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நகர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கிராமத்திற்குள் முடங்கியுள்ளனர். அவசர தேவைகளுக்கு அவ்வழியாக செல்லும் வாகனங்களில் லிஃப்ட் கேட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

முண்டக்கை பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு வயது குழந்தையும் அதன் தாயும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 4 ஆவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. இதில் சூரல்மலையில் இருந்து முண்டக்கை பகுதிக்கு இரும்புப் பாலம் அமைக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு, இரண்டு வயது குழந்தையும் தாயும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அட்டமலை பகுதியில் 4 நாட்களாக ஆதரவின்றி தவித்த வளர்ப்பு நாய் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக, அட்டமலை கிராமத்தில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாமில் இருந்த சந்தோஷ் என்பவர் அட்டமலை கிராமத்தில் உள்ள தனது பூனைக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வளர்ப்பு நாய் சந்தோஷை கண்டதும் ஓடி வந்தது. 4 நாட்களாக பசியால் தவித்த வளர்ப்பு நாயை சந்தோஷ் தன்னோடு முகாமிற்கு அழைத்துச் சென்றார்.

விளம்பரம்

இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சாலியாற்றில் இருந்து இதுவரை 172 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சூரல்மலையில் உற்பத்தியாகி, முண்டக்கை வழியாக, பொத்துக்கல்லை சென்றடையும் சாலியாற்றில், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஏராளமான பொதுமக்கள் அடித்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: “நிலச்சரிவு மீட்பு பணியில் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது” – பினராயி விஜயன் பாராட்டு!

சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சாலியாறு செல்லும் வழிநெடுகிலும் சடலங்கள் ஆங்காங்க கரை ஒதுங்கின. இதுவரை 172 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மலப்புரத்தில் சாலியாற்றில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
Landslide
,
Landslide Death
,
Wayanad
,
Wayanad Landslide 2024

You may also like

© RajTamil Network – 2024