வயநாட்டில் உயிரிழந்தோருக்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி

வயநாட்டில் உயிரிழந்தோருக்கு
மாணவ, மாணவிகள் அஞ்சலிகேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, மதுரை சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.

மதுரை: கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, மதுரை சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை. இந்திய ராணுவத்தினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, உயிரிழந்தவா்களின் உடல்களைத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, மதுரை சிங்காரத் தோப்பில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு செய்தனா். இதில், பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு